search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்
    X

    வங்காள தேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்

    வங்காள தேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மோர்தசா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    வங்காள தேச அணி சமீபத்தில் இலங்கை சென்று விளையாடியது. இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை வங்காள தேச அணி 1-1 டிரா செய்தது. இந்த தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அந்த அணியின் கேப்டனாக இருந்த மோர்தசா கூறினார்.

    அதிலிருந்து தற்போது வரை வங்காள தேச டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று டாக்காவில் உள்ள வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசனை கேப்டனாக நியமிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘மோர்தசா ஓய்வு பெற்ற பிறகு, சாகிப் அல் ஹசனை ஒருமனதாக கேப்டன் பதவிக்கு தேர்வு செய்ய நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். மற்ற சில வீரர்களை பற்றியும் விவாதித்தோம். இறுதியில் நாங்கள் ஷாகிப் அல் ஹசனை தேர்வு செய்ய ஒப்புக்கொண்டோம்’’ என்றார்.

    ஷாகிப் அல் ஹசன் 2009 முதல் 2011 வரை அனைத்து வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருந்தார். நான்கு டி20 கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார். அந்த நான்கு போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் வங்காள தேச அணி மூன்று கேப்டன்களை கொண்டுள்ளது. டெஸ்ட் அணிக்கு முஸ்பிகுர் ரஹிம், ஒருநாள் அணிக்கு மோர்தசா கேப்டனாக உள்ளனர்.
    Next Story
    ×