search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை இந்தியன்ஸ் அணியை 142 ரன்னுக்குள் மடக்கியது டெல்லி டேர்டெவில்ஸ்: சேஸிங் செய்யுமா?
    X

    மும்பை இந்தியன்ஸ் அணியை 142 ரன்னுக்குள் மடக்கியது டெல்லி டேர்டெவில்ஸ்: சேஸிங் செய்யுமா?

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 140 ரன்னுக்குள் கட்டுப்படுத்திய டெல்லி டேர்டெவில்ஸ், இந்த ரன்னை சேஸிங் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    ஐ.பி.எல். தொடரின் இன்றைய 2-வது போட்டி மும்பை ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பைக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்த்தீவ் பட்டேல், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பட்டேல் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ராணா (8), ரோகித் சர்மா (5) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பட்லர் 28 ரன்னில் வெளியேற, மும்பை அணியின் ரன்வேட்டை குறைய ஆரம்பித்தது.

    பொல்லார்டு 26 ரன்னும், குருணால் பாண்டியா 17 ரன்னும், ஹர்திக் பாண்டியா 24 ரன்களும் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. வான்கடே மைதானத்தில் எதிரணியை கட்டுப்படுத்த இந்த ரன்கள் போதாது.

    இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 142 ரன்னை சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது.
    Next Story
    ×