search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு: வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்
    X

    சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு: வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்

    சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. புனே அணியில் 17 வயதே ஆன வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.
    ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. புனேவில் 4 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    புனே அணியில் 17 வயதே ஆன தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அறிமுகமாகியுள்ளார். ராகுல் சாகர் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் யுவராஜ் சிங் உடல்நலக்குறைவால் விளையாடவில்லை. அவருக்குப்பதிலாக பிபுல் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×