search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக உசூ போட்டி காஞ்சீபுர மாணவிகள் தேர்வு
    X

    உலக உசூ போட்டி காஞ்சீபுர மாணவிகள் தேர்வு

    2017-ஆம் ஆண்டிற்கான உசூ என்னும் சீன தற் காப்புக்கலை சாம்பியன் போட்டிகள் அர்மேனியா நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு காஞ்சீபுர மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    காஞ்சீபுரம்:

    2017-ஆம் ஆண்டிற்கான உசூ என்னும் சீன தற் காப்புக்கலை சாம்பியன் போட்டிகள் அர்மேனியா நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு காஞ்சீபுரம் உசூ அசோசியேசனில் பயிற்சி பெற்ற காஞ்சீபுரம் தனியார் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி ஆர்.ஏ. கயல்விழி மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவி வி.ஹரிணி ஆகியோர் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள்மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த உசூ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த போட்டிக்கு பயிற்சி பெற்று தற்போது உலக அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாணவிகளை உசூ தற்காப்புக்கலை பயிற்சியாளரும், உசூ அசோசியேசன் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளருமான டாக்டர் செந்தாமரைக்கண்ணன், தலைவர் பூர்ணச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினார்கள்.

    Next Story
    ×