search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி: தென்ஆப்பிரிக்கா, வங்காள தேசம் அணிகள் அறிவிப்பு
    X

    சாம்பியன்ஸ் டிராபி: தென்ஆப்பிரிக்கா, வங்காள தேசம் அணிகள் அறிவிப்பு

    இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காள தேச அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் தற்போது வீரர்களை தேர்வு செய்து வருகிறது.

    ஆஸ்திரேலியா ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்கா அணியும் வீரர்களை அறிவித்துள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக டேல் ஸ்டெயின் அணியில் இடம்பெறவில்லை. மோர்னே மோர்கல், மகாராஜ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    தென்ஆப்பிரக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-



    1. ஏ.பி. டி வில்லியர்ஸ், 2. ஹசிம் அம்லா, 3. குயின்டான் டி காக், 4. டு பிளிசிஸ், 5. டுமினி, 6. டேவிட் மில்லர், 7. பெஹார்டியன், 8. கிறிஸ் மோரிஸ், 9. பெலுக்வாயோ, 10. ரபாடா, 11. இம்ரான் தாஹிர், 12. வெயின் ப்ரேடோரியஸ், 13. கேஷவ் மகாராஜ், 14. மோர்னே மொர்கல். 15. வெயின் பர்னெல்.

    8 அணிகளில் ஒன்று வங்காள தேசமும் ஒன்று. அந்த அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-



    1. தமீம் இக்பால், 2. சவுமியா சர்கர், 3. இம்ருல் கெய்ஸ், 4. முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), 5. ஷகிப் அல் ஹசன், 6. சபீர் ரஹ்மான், 7. மெஹ்முதுல்லா, 8. மொசாடெக் ஹொசைன், 9. மோர்தசா (கேப்டன்). 10. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 11. ருபெல் ஹொசைன், 12. தஸ்கின் அஹமது. 13. சன்சாமுல் இஸ்லாம், 14. மெஹதி ஹசன், 15. ஷபியுல் இஸ்லாம்.

    Next Story
    ×