search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சன்ரைசர்ஸ் அணியின் ரிசர்வ் வீரர்களின் திறமை மகிழ்ச்சி அளிக்கிறது: லஷ்மண் சொல்கிறார்
    X

    சன்ரைசர்ஸ் அணியின் ரிசர்வ் வீரர்களின் திறமை மகிழ்ச்சி அளிக்கிறது: லஷ்மண் சொல்கிறார்

    சன்ரைசர்ஸ் அணியில் ஆடும் லெவனுக்கு வெளியே இருக்கும் ரிசர்வ் வீரர்களும் சிறப்பான நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆலோசகர் லஷ்மண் கூறியுள்ளார்.
    ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 191 ரன்கள் எடுத்தது. அதன்பின் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஐதராபாத் அணியில் நேற்றைய போட்டியில்தான் முதன்முறையாக கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். அவர் 50 பந்தில் 89 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார். அதேபோல் அந்த அணியின் கவுல், சிராஜ் போன்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள்.

    ஆடும் லெவனில் இடம்பெறாமல் வெளியில் இருக்கும் வீரர்கள் களமிறங்கும்போதும் சிறப்பாக விளையாடுவதால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்த அணியின் ஆலோசகர் லஷ்மண் கூறியுள்ளார்.

    மேலும் இதுகுறித்து லஷ்மண் கூறுகையில், ‘‘நாங்கள் நெருக்கடிக்கு உள்ளான நேரத்தில் பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றில் எதையும் குறித்து கவலையடைவில்லை. குறிப்பாக போட்டி நெருங்கி வரும்போது எந்த பதற்றமும் இல்லை. நாங்கள் எப்போதும் மூன்று துறையிலும் முன்னேற்றத்தை பார்க்கிறோம்.

    கடந்த வருடம் எங்களிடம் இருந்த சில தவறுகளை புதிய வீரர்களை கொண்டு சரிசெய்து கொள்ள பார்க்கிறோம். புதிய வீரர்களை கொண்டு, சிறந்த பீல்டிங்கை உருவாக்குவது ஆடும் லெவன் அணி, எதிரணி மற்றும் அப்போதைய சூழ்நிலையை பொறுத்தது.

    நாங்கள் திறமை வாய்ந்த ஏராளமான வீரர்களை பெற்றுள்ளோம். ஆனால், கிரிக்கெட் போட்டியில் 11 பேர்தான் விளையாட முடியும். அதில் சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே களமிறங்க முடியும் என்பது துரதிருஷ்டவசமானது. நாங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்லது ஒரு பேட்ஸ்மேனை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்பதை பார்ப்பது சிறந்ததாக உள்ளது.

    ரஷித்கான் முக்கிய வீரராக உள்ளார். அவர் விக்கெட்டுக்களை வீழ்த்துவதுடன், கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசுகிறார்’’ என்றார்.
    Next Story
    ×