search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ரேங்க் தானாக முன்னேறும்: பி.வி. சிந்து சொல்கிறார்
    X

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ரேங்க் தானாக முன்னேறும்: பி.வி. சிந்து சொல்கிறார்

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ரேங்க் தானாக முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் சீரிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதனால் சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறினார். அதன்பின் நடைபெற்ற மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஓபன் சீரிஸில் காலிறுதிக்கு மேல் முன்னேறவில்லை. இதனால் 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

    தரவரிசையில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் பி.வி. சிந்து எந்த ஏமாற்றமும் அடையவில்லை. நன்றாக விளையாடினால், தானாகவே ரேங்க் முன்னேற்றம் அடையும் என்று சிந்து கூறியுள்ளார்.

    இதுகுறித்து பி.வி. சிந்து கூறுகையில் ‘‘நன்றாக விளையாடி, சிறந்த திறமையை வெளிப்படுத்தினால் உங்களுடைய ரேங்க் தானாகவே முன்னேற்றம் அடையும். வெற்றி, தோல்வி என்பது வாழ்வின் ஒரு பகுதிதான். சில நேரங்கள் வெற்றி பெறலாம். சில நேரங்கள் தோல்வியை சந்திக்கலாம்.

    ஸ்பெயின் நாட்டின் மரின் கரோலினாவை சில சமயம் நான் வென்றுள்ளேன். சில சமயம் தோற்றுள்ளேன். போட்டியின்போது இருவரில் ஒருவர்தான் பெற்றி பெற முடியும். அதற்காக போட்டியிட்டுக் கொள்வோம். விளையாட்டிற்கு வெளியே நாங்கள் தோழிகள்’’ என்றார்.

    ஒலிம்பிக் தொடரின் இறுதிப் போட்டியில் கரோலினாவிடம் சிந்து தோல்வியடைந்தார். இந்தியன் ஓபனில் அவரை வெற்றி கொண்டார். சிங்கப்பூர் ஓபன் காலிறுதியில் கரோலினாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×