search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணியில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கு இடம்
    X

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணியில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கு இடம்

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இந்திய வம்சாவளியான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் இடம் பிடித்துள்ளார்.
    கேப்டவுன் :

    டாப்-8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

    இந்திய வம்சாவளியான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் முதல் முறையாக ஒரு நாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலும் அணிக்கு திரும்புகிறார்.



    தென்ஆப்பிரிக்க அணி விவரம் வருமாறு:- டிவில்லியர்ஸ் (கேப்டன்), அம்லா, குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னல், பெலுக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர், கேஷவ் மகராஜ், பிரிடோரியஸ், பெஹர்டைன், மோர்னே மோர்கல்.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துடன் தென்ஆப்பிரிக்க அணி 3 ஒரு நாள் போட்டிகளில் (மே.24, மே.27, மே.29) விளையாடுகிறது. இந்த போட்டியிலும் இதே அணியே விளையாடும்.
    Next Story
    ×