search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: மெஸ்சியின் உதவியால் மீண்டும் பாஃர்முக்கு வந்தது பார்சிலோனா
    X

    லா லிகா: மெஸ்சியின் உதவியால் மீண்டும் பாஃர்முக்கு வந்தது பார்சிலோனா

    லா லிகா கால்பந்து தொடரில் மெஸ்சியின் உதவியால் தொடர்ச்சியாக இரண்டு தோல்விக்குப்பின் வெற்றிக்கு திரும்பியுள்ளது பார்சிலோனா.
    கால்பந்து முன்னணி கிளப் அணிகளில் ஒன்று பார்சிலோனா. மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் போன்ற தலைசிறந்த வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.  கடந்த வாரம் நடைபெற்ற லா லிகா தொடரில் மலாகாவிற்கு எதிரான போடடியில்  0-2 என தோல்வியடைந்தது. அதன்பின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி முதல் லெக்கில் யுவான்டஸ் அணி பார்சிலோனாவை 3-0 என வீழ்த்தியது.

    இந்நிலையில் நேற்று லா லிகாகவில் ரியல் சோசியேடாட் அணியை பார்சிலோனா எதிர்கொண்டது. இதில் பார்சிலோனா 3-2 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி இரண்டு கோல்கள் அடித்ததுடன், 3-வது கோல் அடிக்க உதவிகரமாகவும் இருந்தார்.

    இரண்டு தோல்விக்குப்பின் இந்த வெற்றி பார்சிலோனாவிற்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. பார்சிலோனா அடுத்து லா லிகாவில் ரியல் மாட்ரிட் அணியையும், ஐரோப்பிய சாம்பியன் லீக் 2-வது லெக்கில் யுவான்டசையும் எதிர்கொள்கிறது.

    ரியல் மாட்ரிட் ஸ்போர்ட்டிங் சிஜோனுக்கு எதிராக போட்டியில் 3-2 என வெற்றி பெற்றுள்ளது.
    Next Story
    ×