search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய டேபிள் டென்னிஸ்: 2-வது சுற்றில் சரத்கமல் வெற்றி
    X

    ஆசிய டேபிள் டென்னிஸ்: 2-வது சுற்றில் சரத்கமல் வெற்றி

    ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சரத்கமல் ரோ வாங் ஜின்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
    மும்பை :

    ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 11-5, 11-7, 14-12 என்ற நேர்செட்டில் வடகொரியாவின் ரோ வாங் ஜின்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சவுமியாஜித் கோஷ், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி ஆகியோர் தோல்வி கண்டு நடையை கட்டினார்கள்.
    Next Story
    ×