search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: ஐ.சி.எப். - சென்னை யுனைடெட் ஆட்டம் ‘டிரா’
    X

    சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: ஐ.சி.எப். - சென்னை யுனைடெட் ஆட்டம் ‘டிரா’

    நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்த்ல ஐ.சி.எப்.-சென்னை யுனைடெட் எப்.சி. அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது.
    சென்னை :

    சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சீனியர் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப்.-சென்னை யுனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த முதல் டிவிசன் லீக் ஆட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்.டி. சோமசுந்தரம் எப்.சி. அணியை தோற்கடித்தது.

    இன்று நடைபெறும் சீனியர் டிவிசன் ஆட்டத்தில் சுங்க இலாகா-வருமான வரி (மாலை 5 மணி) அணியும், முதல் டிவிசன் ஆட்டத்தில் சென்னை தபால் துறை-லெவன் வாரியர்ஸ் (பிற்பகல் 2.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
    Next Story
    ×