search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உஸ்பெகிஸ்தானை 4-1 என வீழ்த்தியது இந்தியா
    X

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உஸ்பெகிஸ்தானை 4-1 என வீழ்த்தியது இந்தியா

    உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்தியா 4-1 என வெற்றி பெற்று உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    பெங்களூர்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானியா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் அணிகள் பெங்களூரில் விளையாடின. இதில் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 3-0 என முன்னிலை பெற்றது. இதன்மூலம், உலக குரூப் பிளே ஆப் சுற்றை உறுதி செய்திருந்தது.

    இந்நிலையில், கடைசி நாளான இன்று மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் பாய்சீவை 6-3, 6-2 என நேர்செட்களில் வீழ்த்தினார். இதன்மூலம், இந்தியா 4-0 என வலுவான முன்னிலை பெற்றது.

    இதையடுத்து, மற்றொரு மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இடதுகை ஆட்டக்காரரான பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், டெமர் இஸ்மாயிலோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் குன்னேஸ்வரன் வெற்றி பெற்று, இந்தியா உஸ்பெகிஸ்தானை வாஷ்அவுட் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இப்போட்டியின் துவக்கத்தில் இரண்டு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் குன்னேஸ்வரன் பதட்டத்துடன் ஆடியபோது சில தவறுகள் செய்ததால், ஆட்டத்தின் போக்கு அவருக்கு எதிராக திரும்பியது. இறுதியில், 7-5 6-3 என்ற நேர்செட்களில் உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்மாயிலோவ் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.
    Next Story
    ×