search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்: மாற்று ஒற்றையர் போட்டியில் ராம்குமார் வெற்றி
    X

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்: மாற்று ஒற்றையர் போட்டியில் ராம்குமார் வெற்றி

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான மாற்று ஒற்றையர் போட்டியிலும் இந்திய வீரர் ராம் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் அணிகள் பெங்களூரில் விளையாடி வருகின்றன. இதில் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 3-0 என முன்னிலை பெற்றது. இதன்மூலம், உலக குரூப் பிளே ஆப் சுற்றை உறுதி செய்திருந்தது.

    இந்நிலையில், கடைசி நாளான இன்று மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் பாய்சீவை எதிர்கொண்டார். இப்போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராம்குமார் 6-3, 6-2 என நேர்செட்களில் எளிதான வெற்றியை பெற்றார். வெறும் 67 நிமிடங்களில் இப்போட்டி முடிவுக்கு வந்தது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4-0 என முன்னலை பெற்றுள்ளது. மற்றொரு மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இடதுகை ஆட்டக்காரரான பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், டெமர் இஸ்மாயிலோவை சந்திக்க உள்ளார். இப்போட்டியில் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றுவிட்டால், இந்தியா உஸ்பெகிஸ்தானை வாஷ்அவுட் செய்து சாதனை படைக்கும்.
    Next Story
    ×