search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேதர் ஜாதவுக்கு பெங்களூர் கேப்டன் வாட்சன் பாராட்டு
    X

    கேதர் ஜாதவுக்கு பெங்களூர் கேப்டன் வாட்சன் பாராட்டு

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய கேதர் ஜாதவுக்கு பெங்களூர் அணி கேப்டன் ஷேன் வாட்சன் பாராட்டு தெரிவித்தார்.
    பெங்களூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சஸ் பெங்களூர்-டெல்லி டெர்டெவில்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 எடுத்தது. கேதர் ஜாதவ் 37 பந்தில் 69 (5 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்தார். 158 ரன் இலக்குடன் விளையாடிய டெல்லி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. மறுமுனையில் இருந்து ரிஷாப் பரண்ட் அரை சதம் அடித்தார்

    கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் பவன் ரெகி 3 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் 142 ரன்னே எடுத்தது. இதனால் பெங்களுர் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

    வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் ஷேன் வாட்சன் கூறியதாவது:-



    இது ஒரு சிறந்த வெற்றியாகும். இந்த ஸ்கோரை எட்டுவதற்கு கேதர் ஜாதவ் சிறப்பாக செயல்பட்டார். அவர் உத்வேகத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி ஆடினார். முதல் போட்டியில் இருந்து பந்துவீச்சு, பீல்டிங்கில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். பவன் நெகி கடைசி கட்டத்தில் நன்றாக வீசினார்.

    டெல்லி கேப்டன் ஜாகீர்கான் கூறியதாவது:-

    இந்த களம் பேட்டிங் செய்ய நன்கு ஒத்துழைத்தது. ஆனால் எங்களுக்கு பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருக்கு நல்ல உறுதுணை கிடைக்கவில்லை என்றார்.
    Next Story
    ×