search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகேஷ்பூபதியுடனான கசப்பான உறவு எனது நீக்கத்துக்கு காரணம்: லியாண்டர் பெயஸ்
    X

    மகேஷ்பூபதியுடனான கசப்பான உறவு எனது நீக்கத்துக்கு காரணம்: லியாண்டர் பெயஸ்

    மகேஷ்பூபதியுடனான கசப்பான உறவு எனது நீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கழற்றி விடப்பட்ட லியாண்டர் பெயஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் லியாண்டர் பெயஸ் கடைசி நேரத்தில் விளையாடாத கேப்டன் மகேஷ்பூபதியால் கழற்றி விடப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவி வருவதால் இந்த நீக்கம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

    நீக்கத்தால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் 43 வயதான லியாண்டர் பெயஸ், மகேஷ்பூபதி மீது கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து லியாண்டர் பெயஸ் அளித்த பேட்டியில், ‘நான் நேற்றைய (நேற்று முன்தினம்) பயிற்சியின் போது பந்தை நன்றாக அடித்து ஆடினேன். வீரர்கள் தேர்வு முறையில் உள்ள அடிப்படை விதிகளை மீறி தேர்வு நடந்து இருக்கிறது.



    மகேஷ்பூபதியுடனான கசப்பான உறவு எனது நீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம். அணியை தேர்வு செய்ய மகேஷ்பூபதிக்கு உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் அவர் யாருக்கு எதிராகவும் தனிப்பட்ட வெறுப்பை காட்டக்கூடாது. ஒருநேரத்தில் தரவரிசையின் அடிப்படையிலும், மற்றொரு நேரத்தில் தனிப்பட்ட விருப்பம் மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.

    தற்போதைய பார்மின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இருந்தால் யார் சிறப்பாக விளையாடுவார் என்பது தெரிந்து இருக்கும். நாடு மற்றும் ஆட்டத்தின் மீதான அதீத ஆர்வம் காரணமாகவே மெக்சிகோவில் விளையாடிய நான் இங்கு வந்து இருக்கிறேன். கடினமாக உழைத்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். இந்திய அணியில் இடம்பெறுவதை தனிநபர்கள் யாராலும் தடுத்து விட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×