search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியாமி டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி-ஜோஹன்னா கோன்டா
    X

    மியாமி டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கி-ஜோஹன்னா கோன்டா

    அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி டென்னிசில் போட்டியில் வோஸ்னியாக்கி, ஜோஹன்னா கோன்டா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மியாமி :

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 14-ம் நிலை வீரர் தாமஸ் பெர்டிச்சை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெடரர் முதல் செட்டை தனதாக்கினார். 2-வது செட்டை தாமஸ் பெர்டிச் சொந்தமாக்கினார். இதனால் வெற்றி யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது செட் ஆட்டத்தில் அனல் பறந்ததுடன் டைபிரேக்கர் வரை சென்றது. டைபிரேக்கரில் தாமஸ் பெர்டிச் ஒரு கட்டத்தில் 6-4 என்ற கணக்கில் வெற்றியின் விளிம்பில் இருந்தார்.

    ஆனால் சரிவில் இருந்து மீண்ட பெடரர் தொடர்ச்சியாக 4 புள்ளிகள் எடுத்து பெர்டிச்சின் சவாலுக்கு முடிவு கட்டினார். முடிவில் பெடரர் 6-2, 3-6, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் பெர்டிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.



    மற்றொரு கால்இறுதியில் நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) 6-4, 6-7 (7-9), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 6-4, 7-5 என்ற நேர்சேட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு அரைஇறுதியில் கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மியாமி ஓபனில் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு வந்திருக்கும் கோன்டா- வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்துக்காக மோத உள்ளனர்.

    Next Story
    ×