search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி காக் இல்லாதது பெரிய இழப்பு: டெல்லி டேர்டெவில்ஸ் பயற்சியாளர் டிராவிட் சொல்கிறார்
    X

    டி காக் இல்லாதது பெரிய இழப்பு: டெல்லி டேர்டெவில்ஸ் பயற்சியாளர் டிராவிட் சொல்கிறார்

    டி காக் இல்லாதது ஐ.பி்.எல். சீசன் 10-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பெரிய இழப்பு என்று அந்த அணியின் பயி்ற்சியாளரும், ஆலோசகருமான டிராவிட் சொல்கிறார்.
    ஐ.பி.எல். சீசன் 10, டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த தயாராகி வருகின்றன.

    இளம் வீரர்களை கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த சீசனில் கடைசி வரை நான்காவது இடத்தில் இருந்து, பின்னர் அந்த வாய்ப்பை இழந்தது. இந்த தொடரில் முத்திரை பதிக்கும் நம்பிக்கையில் உள்ளது. ஆனால், அந்த அணியில் இடம்பிடித்திருந்த தென்ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டரான டுமினி சொந்த காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    மேலும், அதே நாட்டைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பரும் ஆன குயிண்டான் டி காக் காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ளார். வெளிநாட்டைச் சேர்ந்த இரு முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    இதை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளரும், ஆலோசகருமான ராகுல் டிராவிட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    டுமினி, டி காக் அணியில் இடம்பெறாதது குறித்து டிராவிட் கூறுகையில் ‘‘ஜே.பி. டுமினி மற்றும் குயிண்டான் டி காக் போன்ற பெரிய வீரர்கள் இல்லாதது, உண்மையிலேயே பெரிய இழப்பாகும். இவர்கள் அணியில் இல்லாத செய்தி, வீரர்கள் ஏலத்திற்கு முன்பே நிகழ்ந்திருந்தால் எளிதாக இருந்திருக்கும்.

    ஏனென்றால் நாங்கள் சிறந்த வழியை (மாற்று வீரர்களை ஏலத்தில் எடுப்பது) தேடியிருப்போம். ஆனால், இப்படி தொடர் தொடங்குவதற்கு முன்பு இதுபோன்று நடந்தால், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சாம் பில்லிங்ஸ் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.



    கோரி ஆண்டர்சன், மேத்யூஸ் போன்ற ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். டுமினிக்கு மாற்று வீரராக இவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால், குயிண்டான் டி காக் இழப்பு மிகப்பெரியது. எங்கள் அணியின் மிகப்பெரிய பேட்ஸ்மேன் அவர். எங்களுக்காக ஏராளமான போட்டியில் விளையாடியுள்ளார். அவர் இந்த அணியின் சிறந்த வீரராக தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால், கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் ஏற்படுவது சகஜம்தான். அதனை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.



    எங்களது கண்ணோட்டத்தில் ரிஷப் பந்த் கடந்த சீசனை விட சிறப்பாக செல்யபடுவார் என்று நம்புகிறேன். அவர் மட்டும்தான் முக்கிய காரணியாக இருப்பார் என்று சொல்ல மாட்டேன். கருண் நாயர், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற சிறந்த வீரர்களையும் பெற்றுள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×