search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஸ் விளையாட்டில் இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டரான சென்னை இளைஞர்
    X

    செஸ் விளையாட்டில் இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டரான சென்னை இளைஞர்

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன் ஸ்பெயின் வீரர வீழ்த்தியதின் மூலம் செஸ் விளையாட்டில் இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டரானார்.
    ஷார்ஜா:

    ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா நகரில் ஷார்ஜா மாஸ்டர் செஸ் போட்டித் தொடர் வருகிறது. இப்போட்டியில் ஸ்பெயின் வீரர்டேவிட் ஆண்டன் குய்ஜாரோ-வை வீழ்த்திய சென்னையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஸ்ரீநாத் நாராயணன் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் 46-ம் கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றுள்ளார்.

    தன்னுடைய 8-ம் வயதிலேயே உலக செஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் இடம்பெற்ற ஸ்ரீநாத், 2005-ம் ஆண்டு பிரான்சில் நடந்த 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் போட்டியில் இணை சாம்பியனாக பட்டம் வென்றவர் ஆவார். தன்னுடைய 14 வயதில் சர்வதேச மாஸ்டராக தரம் உயர்ந்த ஸ்ரீநாத், 2012-ம் ஆண்டில் நடந்த ஆசிய இளையோர் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டராக வெற்றி பெற்றிருந்தார்.

    நட்சத்திர செஸ் வீரரும் சென்னையை சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், ஸ்ரீநாத்தின் பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்ட முன்னணி செஸ் வீரர்கள் ஸ்ரீநாத் நாராயணன்-க்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
    Next Story
    ×