search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தென்ஆப்பிரிக்க அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
    X

    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தென்ஆப்பிரிக்க அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

    ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தோல்வியில் இருந்து தப்பியதால் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது.
    துபாய் :

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஒரு புள்ளியை கூடுதலாக பெற்ற இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதற்குரிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும், ரூ.6½ கோடி பரிசுத்தொகையையும் இந்திய அணி ஏற்கனவே பெற்று விட்டது.

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தோல்வியில் இருந்து தென்ஆப்பிரிக்க அணி தப்பியதால் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பறிகொடுத்ததால் ஒரு புள்ளியை இழந்த ஆஸ்திரேலியா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.



    அணிகளின் தரவரிசை வருமாறு:- 1. இந்தியா (122 புள்ளி), 2. தென்ஆப்பிரிக்கா (109), 3. ஆஸ்திரேலியா (108), 4.இங்கிலாந்து (101), 5.பாகிஸ்தான் (97), 6.நியூசிலாந்து (96), 7.இலங்கை (90), 8.வெஸ்ட் இண்டீஸ் (69), 9.வங்காளதேசம் (66), 10.ஜிம்பாப்வே (5).

    ஏப்ரல் 1-ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் அணிக்கு ரூ.3¼ கோடி வழங்கப்படும். அந்த பரிசுத்தொகை தென்ஆப்பிரிக்காவுக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. 3-வது இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×