search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவின் ஆதிக்கம்
    X

    சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவின் ஆதிக்கம்

    இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு சுழற்பந்து ஜாம்பவான்களான அஸ்வின், ஜடேஜாவின் அபாரமான பந்து வீச்சே காரணம்.
    இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு சுழற்பந்து ஜாம்பவான்களான அஸ்வின், ஜடேஜாவின் அபாரமான பந்து வீச்சே காரணம்.

    இந்த சீசனில் (2016-17) இந்திய அணி தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடரை (நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா) கைப்பற்றி உள்ளது. அதாவது 13 டெஸ்டில் 10-ல் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் தோற்றது. ஒட்டு மொத்தத்தில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலியின் அணி முத்திரை பதித்தது.



    2016-17 சீசனில் அஸ்வினும், ஜடேஜாவும் இணைந்து 13 டெஸ்டில் மொத்தம் 153 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினர்.

    இதில் அஸ்வின் 82 விக்கெட் கைப்பற்றினார். ஒரு இன்னிங்சில் 7 முறை 5 விக்கெட்டக்கு மேல் எடுத்தார். 10 விக்கெட்டுக்கும் மேல் 3 தடவை கைப்பற்றினார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். ஜடேஜா 13 டெஸ்டில் 71 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 4 முறை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்) 1 தடவை 10 விக்கெட்டுக்கு அதிகமாகவும் (இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து) எடுத்தார். 48 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்து வீச்சாகும்.



    சமீப காலமாக அஸ்வினை விட ஜடேஜாவின் பந்து வீச்சில் மிகுந்த முன்னேற்றம் காண முடிகிறது. கடைசி 6 டெஸ்டில் அஸ்வின் 28 விக்கெட்தான் கைப்பற்றினார். ஆனால் ஜடேஜாவுக்கு 41 விக்கெட் கிடைத்தது. ஆஸ்திரேலியா தொடரில் ஜடேஜா மிகவும் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை பெற்றார். அவர் 4 டெஸ்டில் 25 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் அஸ்வின் 21 விக்கெட்தான் கைப்பற்றினார்.

    அஸ்வின் - ஜடேஜாவின் ஆதிக்கத்தால் இந்திய அணி டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்கிறது. உள்ளூர் மைதானங்களில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் இந்த ஜோடி இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×