search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனியர் டிவிசன் கால்பந்து: தெற்கு ரெயில்வேக்கு 2-வது வெற்றி
    X

    சீனியர் டிவிசன் கால்பந்து: தெற்கு ரெயில்வேக்கு 2-வது வெற்றி

    நேற்று நடந்த சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் தெற்கு ரெயில்வே 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. தெற்கு ரெயில்வே பெற்ற 2-வது வெற்றியாகும்.
    சென்னை கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் ஆதரவுடன் சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’ போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. தெற்கு ரெயில்வே பெற்ற 2-வது வெற்றியாகும். இந்தியன் வங்கி 3-வது தோல்வியை தழுவியது. சார்லஸ் ஆனந்தராஜ் 2 கோல்கள் (49 மற்றும் 95-வது நிமிடம்) அடித்தார்.

    இன்று முதல் 4 நாட்கள் ஓய்வு நாளாகும். ஏப்ரல் 1-ந்தேதி நடைபெறும் ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே- வருமானவரி, ஐ.சி.எப்-இந்துஸ்தான் ஈகிள்ஸ் அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×