search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 489 ரன் குவிப்பு
    X

    தென்ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 489 ரன் குவிப்பு

    நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 489 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஹேமில்டன், மார்ச். 28-

    நியூசிலாந்து - தென்ஆப் பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹேமில்டனில் நடை பெற்று வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 314 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட் டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 489 ரன் குவித்து ‘ஆல் அவுட்’ ஆனது.

    கேப்டன் வில்லியம்சன் 285 பந்துகளில் 176 ரன் கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும், 3 சிக்சர் களும் அடங்கும். மார்னே மார்கல் ரபடா தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    175 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளை யாடியது. 25 ரன் எடுப்ப தற்குள் அந்த அணி 2 விக் கெட்டை இழந்தது.

    Next Story
    ×