search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியோதர் டிராபியில் தினேஷ் கார்த்திக் அபார ஆட்டம்: தமிழ்நாடு அணி பைனலுக்கு முன்னேறியது
    X

    தியோதர் டிராபியில் தினேஷ் கார்த்திக் அபார ஆட்டம்: தமிழ்நாடு அணி பைனலுக்கு முன்னேறியது

    தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா ப்ளூ அணியை வீழ்த்தியதன்மூலம், தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

    அவ்வகையில், இந்தியா ரெட் அணி இந்தியா ப்ளூ மற்றும் தமிழ்நாடு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று தமிழ்நாடு - இந்தியா ப்ளூ அணிகள் விளையாடின. விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில், முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 93 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் 71 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ப்ளூ அணியின் துவக்க வீரர் மன்தீப் சிங் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தார். ஆனால், மறுமுனையில் தமிழக பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. இதனால் 44.4 ஓவர்களில் இந்தியா ப்ளூ அணி 230 ரன்களில் சுருண்டது. மன்தீப் சிங் 97 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. விசாகப்பட்டினத்தில் 29-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி, இந்தியா ரெட் அணியுடன் மோதுகிறது.
    Next Story
    ×