search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரம்சாலா டெஸ்ட்: முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்
    X

    தரம்சாலா டெஸ்ட்: முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
    தரம்சாலா:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் (111) அடித்தார். வார்னர், வடே அரைசதம் அடித்தனர்.

    இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ஜடேஜா 63 ரன்களிலும், சாஹா 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் களமிறங்கிய வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து ஆடாததால், இந்திய அணி 332 ரன்களில் ஆட்டமிழந்தது.



    இதைத் தொடர்ந்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், அந்த அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரென்ஷா (8 ரன்கள்), வார்னர்(6 ரன்கள்) ஆகியோரை உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு அனுப்பினார். இதன்பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் அபாயகரமான வீரருமான ஸ்மித்தை 17 ரன்களில் குமார் போல்டு ஆக்கினார்.

    ஹாண்ட்ஸ்கோம்ப் 18 ரன்களில் அஷ்வின் பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்ஷ் 1 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களை சேர்த்திருந்தது.

    நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல் தேநீர் இடைவேளைக்குப் பிறகு 45 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது.
    Next Story
    ×