search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணியில் சாதனைத்துளிகளை பார்க்கலாம்.
    தரம்சாலா :

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

    * இந்திய வீரர் லோகேஷ் ராகுல் இந்த தொடரில் நேற்று 5-வது அரைசதம் (64, 90, 51, 67, 60 ரன்) அடித்தார். இதன் மூலம் ஒரு தொடரில் சதமே அடிக்காமல் அதிக அரைசதங்கள் அடித்த இந்தியர்களான சர்தேசாய் (1964 இங்கிலாந்து தொடர்), குண்டப்பா விஸ்வநாத் (1977-78 ஆஸ்திரேலிய தொடர்) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

    * இந்திய வீரர் புஜாரா இந்த சீசனில் (2016-17) டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 1,316 ரன்கள் (13 டெஸ்ட்) குவித்துள்ளார். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனை (1,287 ரன்), இந்தியாவின் கம்பீர்(1,269 ரன்) ஆகியோரை பின்னுக்கு தள்ளிய புஜாரா 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளராக ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (2005-06-ம் ஆண்டில் 12 டெஸ்டில் 1,483 ரன்கள் எடுத்தார்) திகழ்கிறார்.



    * கருண் நாயரின் பேட்டிங் தொடர்ந்து சொதப்பலாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்து வரலாறு படைத்த பிறகு அவர் எடுத்த ரன்கள் விவரம்:- 26, 0, 23, 5 ரன்.

    * இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடஜா நேற்று டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்தார். 30-வது டெஸ்டில் ஆடும் ஜடேஜா 1,004 ரன்களும், 139 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். டெஸ்டில் ஆயிரம் ரன் மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 10-வது இந்தியர் என்ற சிறப்பை ஜடேஜா பெற்றார்.

    * ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இந்தியாவுக்கு எதிராக இதுவரை 63 விக்கெட்டுகளை (14 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் லான்ஸ் கிப்சுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சாதனை பட்டியலில் இலங்கையின் முரளிதரன் 105 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறார்.
    Next Story
    ×