search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியோதர் டிராபி: தவான் சதத்தால் இந்தியா ரெட் அணி அபார வெற்றி
    X

    தியோதர் டிராபி: தவான் சதத்தால் இந்தியா ரெட் அணி அபார வெற்றி

    தியோதர் டிராபியில் தவானின் சதத்தால் இந்தியா ரெட் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ப்ளூ அணியை வீழ்த்தியது. குல்கர்னி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
    இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

    இன்றைய போட்டியில் இந்தியா ரெட் - இந்தியா ப்ளூ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹர்பஜன் சிங் தலைமையிலான இந்தியா ப்ளூ அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    இந்திய ரெட் அணியின் கேப்டன் பார்தீவ் பட்டேல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பட்டேல் சரியாக 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். தவான் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 122 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 128 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த ஜக்கி 53 ரன்னும், ஹர்பிரீத் சிங் 29 ரன்னும் சேர்க்க இந்தியா ரெட் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது.

    பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ப்ளூ அணி 48.2 ஓவரில் 304 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ரெட் அணி வெற்றி பெற்றது. ப்ளூ அணி சார்பில் அம்பதி ராயுடு 92 ரன்னும், ஹூடா 46 ரன்னும் எடுத்தனர். ரெட் அணியின் தவால் குல்கர்னி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்த தொடரின் 2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில் தமிழ்நாடு - இந்தியா ரெட் அணிகள் மோதுகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணி 29-ந்தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
    Next Story
    ×