search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூல்ட்ரிங்ஸ் பாட்டில் சுமந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்திய விராட் கோலி
    X

    கூல்ட்ரிங்ஸ் பாட்டில் சுமந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்திய விராட் கோலி

    காயத்தால் 4-வது போட்டிக்கான ஆடும் லெவன் இந்திய அணியில் இடம்பெறாத போதிலும், 12-வது வீரராக கூல்ட்ரிங்ஸ் பாட்டில் சுமந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியது. உலக கிரிக்கெட் வல்லுனர்கள் இந்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இடம்பெற முடியாமல் போனது. இதனால் ரகானே கேப்டனாக பணியாற்றினார். அணியில் இடம்பெறவில்லை என்றாலும் 12-வது வீரராக செயல்பட்டார். வீரர்கள் அறையில் இருந்து கொண்டு போட்டியை உற்று கவனித்தார். மேலும் வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

    6-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின்போது பந்து, தனது தன்மையை சற்று இழந்ததாக உணர்ந்த உமேஷ் யாதவ் பந்தை மாற்றித் தரும்படி நடுவரிடம் கோரிக்கை விடுத்தார். இதனால் போட்டியின் இடையே சற்று இடைவெளி ஏற்பட்டது. அப்போது விராட் கோலி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கும் இந்திய அணியின் கேப்டன் என்பதை கருத்தில் கொள்ளாமல், சக வீரர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை சுமந்து கொண்டு மைதானத்திற்குள் வந்தார். அப்போது வீரர்களுடன் சிறிது நேரம் உரையாடி தனது கருத்துக்களை கூறிவிட்டுச் சென்றார்.

    மதிய உணவு இடைவேளை, தேனீர் இடைவேளை மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை ஆல்அவுட் ஆக்கியபின் இந்திய வீரர்கள் அறைக்கு திரும்பிய போது ஒவ்வொரு வீரரையும் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
    Next Story
    ×