search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரை வென்றால் புனித கோப்பையை அடைவதாகும்: ஆலன் பார்டர் சொல்கிறார்
    X

    தொடரை வென்றால் புனித கோப்பையை அடைவதாகும்: ஆலன் பார்டர் சொல்கிறார்

    தரம்சாலா போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால், ஆஸ்திரேலியா புனித கோப்பையை அடைவது போன்றதாகும் என்று ஆலன் பார்டர் கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பார்டர் - கவாஸ்கர் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, டிரா மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் நாளை தொடங்க இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் தரம்சாலா போட்டியின் மீது அனைவரது பார்வையும் விழுந்துள்ளது.



    இந்நிலையில், தரம்சாலா போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றினால், ஆஸ்திரேலியா புனித கோப்பையை அடைவதாகும் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஆலன் பார்டர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றினால், இதுவரை எந்த அணியும் செய்யாத மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றுவது ஆஸ்திரேலியாவிற்கு புனித கோப்பையை அடைவது போன்றதாகும். அது நம்ப முடியாததாகவும் இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×