search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூறு சதவீதம் உடல் தகுதி இருந்தால் தான் விளையாடுவேன்: விராட் கோலி
    X

    நூறு சதவீதம் உடல் தகுதி இருந்தால் தான் விளையாடுவேன்: விராட் கோலி

    நூறு சதவீதம் உடல் தகுதி இருந்தால் தான் நாளைய போட்டியில் விளையாடுவேன் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய கேப்டன் விராட் கோலி 3-வது டெஸ்டின் போது, ‘பவுண்டரி’ நோக்கி ஓடிய பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது வலது தோள்பட்டையில் காயமடைந்தார். அந்த காயம் முழுமையாக சீராகவில்லை. தோள்பட்டையில் போடப்பட்ட ‘பேண்டேஜ்’ இன்னும் அகற்றப்படவில்லை. நேற்று மைதானத்திற்கு வந்த விராட் கோலி பேட்டிங் வலைபயிற்சி எதிலும் ஈடுபடவில்லை. சிறிது நேரம் பந்தை தூக்கி எறிந்து பீல்டிங் பயிற்சி மட்டும் செய்தார்.

    அவர் தொடர்ந்து விளையாடும் போது காயத்தன்மை மேலும் மோசமடைந்து விடக்கூடாது என்ற கவலையும் அணி நிர்வாகத்துக்கு உள்ளது.

    இந்நிலையில், நூறு சதவீதம் உடல் தகுதி இருந்தால் மட்டும் தான் நாளைய போட்டியில் விளையாடுவேன் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அணியில் எல்லோருக்கும் ஒரே நடைமுறை தான். எனக்கு எந்த வகையில் விதிவிலக்கு அளிக்கப்படாது. நூறு சதவீதம் உடல் தகுதி இருந்தால் தான் விளையாடுவேன். பிசியோதெரபி சோதனைகளுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்” என்றார்.

    இதனிடையே, இன்றும் பயிற்சியில் கலந்து கொண்ட விராட் கோலி பேட்டிங்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளவில்லை.



    Next Story
    ×