search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரை தீர்மானிக்கும் என்பதால் முடிவு தரும் ஆடுகளமாக இருக்கும்: ஹசில்வுட் சொல்கிறார்
    X

    தொடரை தீர்மானிக்கும் என்பதால் முடிவு தரும் ஆடுகளமாக இருக்கும்: ஹசில்வுட் சொல்கிறார்

    தரம்சாலாவில் நடைபெற இருக்கும் நான்காவது போட்டி, தொடரை தீர்மானிக்கும் என்பதால் முடிவு தரும் ஆடுகளமாகத்தான் இருக்கும் என ஹசில்வுட் எதிர்பார்கிறார்.
    தரம்சாலா மைதானத்தின் ஆடுகளம் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதேவேளையில் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின்போது ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மிட்செல் சான்ட்னெரின் சுழற்பந்து வீச்சும், மெக்கிளேனகனின் ‘கட்டர்’ பந்தும் நியூசிலாந்தை வெற்றி பெற வைத்தது.

    இது ஒருபுறம் இருக்க 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது நாக்பூர் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், கில்லெஸ்பி மற்றும் காஸ்புரோவிச் ஆகியோரின் வேகத்தில் இந்தியா பணிந்தது.

    ராஞ்சி ‘ஸ்லோ’ பிட்ச் ஆக இருந்தது. பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் சிரமம் படவில்லை. தற்போது தரம்சாலா இந்தியாவின் தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் முடிவு தெரியும் வகையில் ஆடுகளம் அமைக்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் கூறியுள்ளார்.

    மேலும் இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘தரம்சாலா ஆடுகளம் முடிவை தீர்மானிக்கும் ஆடுகளமாக இருக்கும். இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதால், அவர்கள் போட்டியில் முடிவு கிடைக்க வேண்டிய வகையில்தான வேலை செய்வார்கள். நெருக்கடி முழுவதும் அவர்கள் மீதுதான் உள்ளது. எங்களுக்கு டிரா செய்தாலே மோதும். ஆனால், நாங்கள் உண்மையிலேயே தரம்சாலாவில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்ற விரும்புகிறோம்.

    தரம்சாலாவில் பந்து வேகமாகவும், பவுன்சராகவும் செல்வதை பார்க்க விரும்புகிறோம். ஆனால் புனே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றார்கள். ஆனால், ஆடுகளம் அப்படி இல்லை. அவர்கள் பேட் கம்மின்ஸ் வேகப்பந்தை ராஞ்சி போட்டியில் பார்த்திருப்பார்கள். அதைவிட வேகமாக பந்து வீச்சை அவர்கள் விரும்பமாட்டார்கள் என நினைக்கிறேன்.



    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், அது எங்களின் சொந்த மைதானம் போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், நாங்கள் அப்படி உணர்வோம் என்று நினைக்கவில்லை.

    டி20 உலகக்கோப்பையின் போது நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும்போது ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அவர்கள் என்ன ஆடுகளம் அமைக்க விரும்புகிறார்களோ, அதை அவர்களால் உருவாக்க முடியும். சில நேரம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கலாம், பவுன்சருக்கு சாதகமாக இருக்கலாம். இல்லையெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம். இதை நான் கண்டுபிடிக்க வேண்டும்.’’ என்றார்.
    Next Story
    ×