search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து டிம் சவுத்தி நீக்கம்: நியூசி.க்கு பின்னடைவு
    X

    காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து டிம் சவுத்தி நீக்கம்: நியூசி.க்கு பின்னடைவு

    காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீக்கப்பட்டுள்ளார்.
    நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 25-ந்தேதி (சனிக்கிழமை) 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் சொந்த மண்ணில் தொடரை இழக்க வேண்டும் என்ற நிலையில், வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் காயம் காரணமாக 2-வது போட்டியில் விளையாடவில்லை. இதனால் டிம் சவுத்தி அணியில் இடம்பிடித்தார். தற்போது பயிற்சியின்போது டிம் சவுத்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



    அந்த அணியில் நீல் வாக்னர், மேட் ஹென்றி, கொலின் டி கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் மூன்று பேர் 3-வது போட்டியில் களம் இறங்குவார்கள். இதில் நீல் வாக்னர், மேட் ஹென்றி ஆகியோர் கடந்த இரண்டு போட்டிகளில் இடம்பெறவில்லை.

    அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் டி காக்கும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். அவர் அணியில் இடம்பெறுவாரா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை அந்த அணி வெளியிடவில்லை.
    Next Story
    ×