search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’: சென்னை சிட்டி அணி தொடர்ச்சியாக 6-வது வெற்றி
    X

    சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’: சென்னை சிட்டி அணி தொடர்ச்சியாக 6-வது வெற்றி

    சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’ ஆட்டம் ஒன்றில் சென்னை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் தொடர்ச்சியாக அந்த அணி 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
    சென்னை:

    சென்னை கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன் சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’ போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை சிட்டி எப்.சி. - சென்னை எப்.சி. அணிகள் மோதின. இதில் சென்னை சிட்டி எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை சிட்டி அணியில் ஜோசப் 2 கோல்களும் (27 மற்றும் 88-வது நிமிடம்), டென்சன் ஒரு கோலும் (29-வது நிமிடம்) அடித்தனர். சென்னை எப்.சி. அணியில் ஜோகரிங்கும் (40-வது நிமிடம்) கோல் அடித்தனர்.

    சென்னை சிட்டி அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி 18 புள்ளியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சென்னை எப்.சி. மூன்றாவது தோல்வியை தழுவியது.

    மற்றொரு ஆட்டத்தில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் - ஐ.சி.எப். அணிகள் மோதின. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் அணியில் விட்டாலிஸ் (9-வது நிமிடம்), ரங்சிங் (39-வது நிமிடம்), கோசோ (57-வது நிமிடம்), ஞானசேகரன் (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

    ஐ.சி.எப். அணியில் பிரிடி 2 கோலும் (40 மற்றும் 48-வது நிமிடம்), கார்த்திக் (23-வது நிமிடம்), பாஸ்கர் (81-வது நிமிடம்) ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர்.

    மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் முதல் ‘டிரா’ செய்து புள்ளியை பெற்றது. அந்த அணி இதற்கு முன்பு ஆடிய 4 ஆட்டங்களிலும் தோற்று இருந்தது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் வங்கி விவா சென்னை, தெற்கு ரெயில்வே- வருமான வரி மனமகிழ் மன்றம் அணிகள் மோதுகின்றன.

    நேற்று நடந்த முதல் டிவிசன் ஆட்டத்தில் இந்திய உணவு கழகம் 3-0 என்ற கணக்கில் தபால் துறை அணியையும், ஒய்.எம்.எஸ்.சி. 7-2 என்ற கணக்கில் சென்னை துறைமுகத்தையும் வீழ்த்தின.
    Next Story
    ×