search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர் ராம்குமார் முன்னேற்றம்
    X

    டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர் ராம்குமார் முன்னேற்றம்

    சர்வதேச டென்னிஸ் தர வரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ராம்குமார் 8 இடங்கள் முன்னேறி 269-வது இடத்தை பிடித்துள்ளார்.
    டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ராம்குமார் 8 இடங்கள் முன்னேறி 269-வது இடமும், யுகி பாம்ப்ரி 34 இடங்கள் ஏற்றம் கண்டு 307-வது இடமும், சகெத் மைனெனி 26 இடங்கள் சரிந்து 309-வது இடமும் பிடித்துள்ளனர்.



    இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 23-வது இடத்தில் தொடருகிறார். மற்ற இந்திய வீரர்கள் லியாண்டர் பெயஸ் ஒரு இடம் பின்தங்கி 57-வது இடமும், திவிஜ் சரண் 58-வது இடமும், புராவ் ராஜா 62-வது இடமும் பெற்றுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 7-வது இடத்தில் நீடிக்கிறார்.

    Next Story
    ×