search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: வாவ்ரிங்காவை வீழ்த்தி பெடரர் சாம்பியன்
    X

    இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: வாவ்ரிங்காவை வீழ்த்தி பெடரர் சாம்பியன்

    இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் வாவ்ரிங்காவை 6-4, 7-5 என வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    அமெரிக்காவில் இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 3-வது இடத்தில் இருக்கும் வாவ்ரிங்காவும், 9-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரரும் மோதினார்கள்.

    இந்த ஆண்டிற்கான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற பெடரர் சிறப்பாக விளையாடினார். இதனால் 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இண்டியன் வெல்ஸ் சாம்பியன் பட்டத்தை ரோஜர் பெடரர் வெல்வது இது ஐந்தாவது முறையாகும்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் எலெனா வெஸ்னினா, ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை 6 (6)-7 (8), 7-5, 6-4 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
    Next Story
    ×