search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உணவு இடைவேளை வரை நின்றிருந்தால் ஒட்டுமொத்த கதையே மாறியிருக்கும்: முரளி விஜய்
    X

    உணவு இடைவேளை வரை நின்றிருந்தால் ஒட்டுமொத்த கதையே மாறியிருக்கும்: முரளி விஜய்

    நான் மதிய உணவு இடைவேளை வரை நின்றிருந்தால் ஒட்டுமொத்த கதையே மாறுபட்டிருக்கும் என்று 82 ரன்னில் அவுட்டான முரளி விஜய் கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 130 ரன்னுடனும், சகா 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாட, முரளி விஜய் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். லோகேஷ் ராகுல் 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது விஜய் 86 பந்தில் 23 ரன்கள்தான் எடுத்திருந்தார். அதன்பின் முதல் நாள் ஆட்ட முடிவில் 112 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார். லோகேஷ் ராகுல் அவுட்டான பின்னர் 26 பந்தில் 18 ரன்கள் சேர்த்தார்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய முரளி விஜய், மதிய உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரின் 4-வது பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அவர் 183 பந்தில் 82 ரன்கள் சேர்த்தார். கடைசி மூன்று பந்துகளில் அவுட்டாகாமல் இருந்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என முரளி விஜய் கூறியுள்ளார். இன்று 71 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். அப்போதைய நிலையில் புஜாரா 139 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்தார்.

    இன்றைய ஆட்டம் குறித்து முரளி விஜய் கூறுகையில் ‘‘இது என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் என்னு மதிப்பீடு வழங்கமாட்டேன். ஆனால் கடுமையாக போராடினேன். நேற்று லோகேஷ் ராகுல் சிறந்த வகையில் பேட்டிங் செய்தார். அவரது ஆட்டத்தை பயன்படுத்தி நான் நிதானமாக விளையாட விரும்பினேன். கடின முயற்சி எடுக்கவில்லை.



    இன்று எனது ஆட்டத்தில் சற்று கடினத்தை மேற்கொண்டேன். புஜாரா சதம் அடித்து நல்ல நிலைமையில் உள்ளார். நாளை அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் சரியான பகுதியில் பந்து பிட்ச் செய்கிறபோது, இந்த ஆடுகளத்தில் ரன் அடிப்பது மிகவும் கடினம்.

    நான் மதிய உணவு இடைவேளை வரைக்கும் அவுட்டாகாமல் இருந்திருந்தால், அது ஒட்டுமொத்த மாறுபட்ட கதையாக மாறியிருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×