search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்: மியான்தத் ஆவேசம்
    X

    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்: மியான்தத் ஆவேசம்

    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடும் வீரர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் வலியுறுத்தியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியபோது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோருக்கு ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டது. அவர்களது தடை நீக்கப்பட்டு மொகமது ஆமிர் சர்வதேச அணிக்கு திரும்பியுள்ளார். சல்மான் பட்டை அணிக்கு தேர்வு செய்ய ஆலோசித்து வருகின்றன.

    இந்த மேட்ச் பிக்சிங் நடைபெற்ற பொழுது, வீரர்களுக்கு ஐந்தாண்டு தடை வழங்கக்கூடாது. அதற்குப் பதிலாக வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும். மீண்டும் அவர்கள் கிரிக்கெட்டிற்கு அடியெடுத்து வைக்கக்கூடாது. அப்படியென்றால்தான் மற்ற வீரர்களுக்கு பயம் இருக்கும் என்று விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலைமையில்தான் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்ட ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ தொடரின்போது சில வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐந்து வீரர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. தற்போது அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



    ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுட்ட வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஜாவேத் மியான்தத் ஒருபடி மேல்சென்று அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜாவேத் மியான்தத் கூறுகையில் ‘‘பாகி்ஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கிரிக்கெட்டில் ஊழலை தடுக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் நீங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது?. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை பொறுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.
    Next Story
    ×