search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச ஐஸ் ஹாக்கி போட்டியில் முதல் வெற்றி: இந்திய பெண்கள் அணி சாதனை
    X

    சர்வதேச ஐஸ் ஹாக்கி போட்டியில் முதல் வெற்றி: இந்திய பெண்கள் அணி சாதனை

    முதன்முறையாக சர்வதேச ஐஸ் ஹாக்கி போட்டியில் இந்திய பெண் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
    இந்திய பெண்கள் ஐஸ் ஹாக்கி அணி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு கடந்த வருடம் தகுதிப் பெற்றது. அதன்படி சீன தைபேயில் நடைபெற்ற ஆசிய சேலஞ்ச் கோப்பையில் கலந்து கொண்டது. அப்போது புதிய அணி என்பதால் நான்கு போட்டிகளில் 39 கோல்கள் வாங்கியது. ஐந்து கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இந்நிலையில் சர்வதேச ஐஸ் ஹாக்கி பெடரேசன் சேலஞ்ச் கோப்பைக்கான ஆசிய போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை எதிர்கொண்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்தியாவிற்கு முதல் வெற்றியாகும். இதன்மூலம், சர்வதேச ஐஸ் ஹாக்கி வரலாற்றில் இந்தியா தனது சாதனையை பதிவு செய்துள்ளது.
    Next Story
    ×