search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள்
    X

    திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள்

    திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து தொடர் போட்டிகள் நகரின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து தொடர் போட்டிகள் நகரின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று 7 போட்டிகள் நடந்தது. பிரிமீயர் டிவிசன் பிரிவின் முதல் போட்டியில், பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணி, சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்த போட்டியில் மீண்டும் களமிறங்கிய பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணி, ஆர்.என்.எல். கிளப் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. பின்னர் முதல் டிவிசன் பிரிவில் நடந்த போட்டியில், பத்மாவதி கிளப்-ஆர்.வி.எஸ். கல்லூரி அணிகள் மோதின. இதில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன.



    2-வது டிவிசன் பிரிவில் நடந்த முதல் போட்டியில், ஜி.ஆர்.ஐ. கிளப் அணி, எஸ்.பி.எம். கல்லூரி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்த போட்டியில், திண்டுக்கல் ஆர்ட்ஸ் கிளப் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் ஜி.ஆர்.ஐ. கால்பந்து அணி வீழ்த்தியது. 3-வது டிவிசன் பிரிவில் நடந்த முதல் போட்டியில், எஸ்.எஸ்.எம். கல்லூரி அணி, 4-1 என்ற கோல் கணக்கில் ஏ.பி.சி. கல்லூரி அணியை வீழ்த்தியது. பின்னர் நடந்த மற்றொரு போட்டியில், மீண்டும் களமிறங்கிய எஸ்.எஸ்.எம். கல்லூரி அணி, முத்து நினைவு கிளப் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

    Next Story
    ×