search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாகூரில் பி.எஸ்.எல். இறுதிப் போட்டி: பாகிஸ்தான் முடிவுக்கு சாஹித் அப்ரிடி வரவேற்பு
    X

    லாகூரில் பி.எஸ்.எல். இறுதிப் போட்டி: பாகிஸ்தான் முடிவுக்கு சாஹித் அப்ரிடி வரவேற்பு

    லாகூரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதை அப்ரிடி வரவேற்றுள்ளார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டின் 2-வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இறுதிப் போட்டியை பாகிஸ்தான் நாட்டின் லாகூர் கடாபி மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த சமயத்தில் லாகூரில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதனால் போட்டி நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அணி உரிமையாளர்கள் விளையாட சம்மதம் தெரிவித்ததால் போட்டியை நடத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான அப்ரிடி வரவேற்றுள்ளார்.



    இதுகுறித்து அப்ரிடி கூறுகையில் ‘‘லாகூரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியை நடத்த எடுத்த முடிவு மிப்பெரிய அளவிலானது. நான் அந்த இறுதிப் போட்டியை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

    மேலும் தன்னுடைய பிரிவு உபசார போட்டியை லாகூரில் விளையாட வேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் சர்வதேச போட்டிகளில் இருந்து அப்ரிடி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்ரிடி தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஷல்மி அணிக்காக விளையாடி வருகிறார். பிளே ஆப் சுற்றில் பெஷாவர் அணி குவெட்டா அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி லாகூரில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி மற்றொரு போட்டியில் மோத வேண்டிய நிலை உள்ளது.
    Next Story
    ×