search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி மீண்டும் எழுச்சி பெறும்: வி.வி.எஸ். லட்சுமண் நம்பிக்கை
    X

    இந்திய அணி மீண்டும் எழுச்சி பெறும்: வி.வி.எஸ். லட்சுமண் நம்பிக்கை

    புனேயில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டும் டெஸ்டில் எழுச்சி பெறும் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், அசாருதீன் ஆகியோர் வீரர்களின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து இருந்தனர். தெண்டுல்கர் வீரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

    இந்த நிலையில் இந்திய அணி மீண்டும் எழுச்சி பெறும் என்று முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், டெலிவிசன் வர்ணனையாளருமான வி.வி.எஸ். லட்சுமண் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


                                                  கே.எல்.ராகுல், விராட் கோலி

    புனே டெஸ்டில் இந்திய அணியின் தோல்வி எதிர்பாராத ஒன்றாகும். இவ்வளவு மோசமான தோல்வியை தழுவியதால் சித்த பிரம்மை போல் இருக்கிறது. இந்திய வீரர்கள் இந்த தோல்வியில் இருந்து முற்றிலும் பாடம் கற்று இருப்பார்கள். விராட் கோலி மற்றும் வீரர்களை பார்த்து நான் மிகவும் பரிதாப்படுகிறேன். அவர்களது வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

    தோல்விக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை தவிர்த்து ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புனேயில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து இந்திய அணி பெங்களூர் டெஸ்டில் எழுச்சி பெறும்.

    4 டெஸ்ட் கொண்ட தொடர் என்பதால் இந்தியாவுக்கு சாதகமாகவே புனேயில் ஏற்பட்ட தோல்விக்கு எழுச்சி பெற போதுமான நேரம் இருக்கிறது. குறிப்பாக விராட் கோலி தனது திறமையை வெளிப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.

    இந்த தொடர் முழுவதும் புனே ஆடுகளம் குறித்து விவாதிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


                                              வி.வி.எஸ். லட்சுமண், டிராவிட்

    வி.வி.எஸ். லட்சுமண் 134 டெஸ்டில் விளையாடி 8781 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.87 ஆகும் 17 சதமும், 56 அரை சதமும் அடித்துள்ளார். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா மைதானத்தில் அவர் குவித்த 281 ரன் யாராலும் மறக்க இயலாத ஒன்றாகும். பாலோ ஆன் பெற்று விளையாடிய இந்த டெஸ்டில் வி.வி.எஸ். லட்சுமண், டிராவிட் ஆட்டத்தால் இந்திய அணி பெற்ற வெற்றி சிறந்ததாக கருதப்படுகிறது.
    Next Story
    ×