search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா தொடரில் பெனால்டி மூலம் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனை
    X

    லா லிகா தொடரில் பெனால்டி மூலம் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனை

    வில்லாரியலுக்கு எதிரான போட்டியில் பெனால்டி மூலம் கோல் அடித்ததன் மூலம், லா லிகாவில் பெனால்டி மூலம் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.
    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மிகப்பெரிய கால்பந்து தொடர் லா லிகா. இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.

    நேற்று நடைபெற்ற வில்லாரியல் அணிக்கெதிராக பெனால்டி மூலம் ரொனால்டோ கோல் அடித்தார். இதன் மூலம் லா லிகா தொடரில் பெனால்டி மூலம் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கடந்த மாதம் 15-ந்தேதி செவில்லாவிற்கு எதிராக பெனால்டி கோல் அடித்ததன் மூலம் 56 கோல்கள் அடித்த முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் ஜாம்பவான் ஹியுகோ சான்செஸ் சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது மேலும் ஒரு கோல் அடித்து 57 கோல்கள் உடன் முதல் இடத்தில் உள்ளார்.



    பார்சிலோனா அணியின் மெஸ்சி 43 கோல்கள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். லுபோஸ்லாவ் பெனிவ் 44 கோல்களுடன் 3-வது இடத்திலும், ரொனால்ட் கோயமேன் 45 கோல்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.



    ஒட்டுமொத்த லீக் போட்டிகளை வைத்து பார்க்கும்போது அதிக பெனால்டி கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 16-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×