search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இதுபோன்ற உண்மையான சோதனை தேவையானது: கோலியின் முழுமையான பேட்டி
    X

    இதுபோன்ற உண்மையான சோதனை தேவையானது: கோலியின் முழுமையான பேட்டி

    இதுபோன்ற உண்மையான சோதனை தேவையானது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புனே டெஸ்ட் தோல்வி குறித்து கருத்து கூறியுள்ளார்.
    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து விராட் கோலி அளித்துள்ள முழுப்பேட்டியை இங்கே காண்போம்.

    தோல்விக்கு பின் விராட் கோலி அளித்துள்ள பேட்டி பின் வருமாறு:-

    இரண்டு இன்னிங்சிலும் எங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. எங்களது திட்டத்தை செயல்படுத்திய விதம் சிறப்பாக அமையவில்லை. பெருமைப்படும் வகையில் எங்களுக்கு பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. பேட்ஸ்மேன்கள் அவர்களது வேலைசரியாக சரியாக செய்ய வேண்டியது அவசியம். பேட்டிங் நல்ல தரமான வகையில் இல்லை. இது நாம் எப்படி பேட்டிங் செய்யக்கூடாது என்பதை காட்டுகிறது.

    இரண்டு இன்னிங்சிலும் நான்கு அல்லது ஐந்து வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இதுபோன்ற அரிதாகத்தான் நிகழும். நாங்கள் கடந்த சில மாதங்களாக பேட்டிங் செய்ததை வைத்து இதைச் சொல்கிறேன். எங்களுடைய பேட்டிங் மிகவும் மோசமானது என்று உறுதியாகச் சொல்வேன். பேட்டிங் மிகவும் மோசம். அதை சரிசெய்து கொண்டு வலுவாக பெங்களூர் செல்ல வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியது தேவையானது. இந்த தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன.



    2-வது இன்னிங்சில் நான் அவுட்டான பந்தை, முன்கூட்டியே சென்று பந்தை விட்டுவிட்டேன். சற்று காத்திருந்திருக்க வேண்டும். அது என்னுடைய தவறுதான்.

    இது இன்னொரு சர்வதேச போட்டிதான். பெரிய தொடரை தீர்மானிக்கும் போட்டியல்ல. போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறும்போது எப்படி அதிக அளவில் சந்தோசப்படாமல் அமைதியாக இருந்தோமோ, அதைபோல் தோல்வியை சந்திக்கும்போதும் இருக்க வேண்டும்.

    கடந்த முறை காலே போட்டியிலும் இதுபோன்று நாம் சொற்ப ரன்களில் அவுட்டானோம். சர்வதேச நிலைக்கு நாம் என்ன வேலை செய்ய வேண்டும், எதை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை பரிந்து கொள்ள இதுபோன்ற உண்மையான சோதனை நமக்குத் தேவைப்படுகிறது என்பதை உறுதியாகச் சொல்வேன்.

    ஒரு பேட்ஸ்மேனுக்கு ஐந்து கேட்ச்களை கோட்டைவிட்டால், உண்மையிலேயே வெற்றிக்கு தகுதியானவர்கள் இல்லை. அதேபோல் 11 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தாலும்தான். இதில் வெற்றி பெற்றிந்தால் நீங்கள் எந்த கேள்விகளையும் கேட்கமாட்டீர்கள். இந்த முடிவால் எங்களுடைய மனநிலை மாறாது.



    நான் அனைத்து பந்து வீச்சாளர்களையும் குற்றம்சாட்டமாட்டேன். பேட்ஸ்மேன்கள் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். எதிரணி மிகப்பெரிய முன்னிலையைப் பெற்ற பிறகு, அதில் இருந்து மீண்டுவர மிகவும் கடினம். பந்து வீச்சாளர்கள் அவர்களின் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முயற்சி செய்தார்கள். ஸ்லோ பிட்சில் உமேஷ் யாதவின் பந்து வீச்சை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது.

    நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதனால் வெற்றி பெற்றோம். தற்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதனால் இந்த டெஸ்டில் தோல்வியடைந்தோம். இந்த தோல்வியை இப்படித்தான் நாம் எளிதான நோக்க வேண்டும். முன்னேறிச் செல்ல இந்த போட்டியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட விரும்ப வேண்டும். முதல் பந்தில் இருந்து ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள் உள்ளாக்கும் வகையில் அதிக நோக்கங்களுடன் அடுத்த போட்டியில் திரும்பி வருவோம் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

    19 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற பின்னர் இதுபோன்ற ஒரு தோல்விக்குள் சுற்றிசுற்றி வருவதை நான் விரும்பவில்லை. ஒரு போட்டியில் மோசமான விளையாடுவது, கிரிக்கெட்டில் ஒரு அம்சம்தான். இந்திய அணியை தோற்கடிக்க முடியாது என்று மக்கள் நினைகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாவிடில் எந்த அணியும் எங்களை வெற்றி கொள்ள முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த போட்டியில் இருந்து நேர்மறையான விஷயத்தை எடுக்க வேண்டுமென்றால், அது நம்முடைய பந்து வீச்சுதான்.

    நமது பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் பந்தை டர்ன் செய்தார்கள். அதனால் விக்கெட் விழவில்லை. அவர்கள் குறைந்த அளவில் பந்தை டர்ன் செய்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். உங்களது ஆட்டத்திறனை செயல்படுத்தாவிடில், பிளாட் ஆடுகளத்தில் கூட விக்கெட்டை இழக்க நேரிடும். நமது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

    ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக செயல்படுத்தவில்லையெனில், எந்தவொரு பந்து வீச்சும் அபாயகரமானதாக இருக்கும். பகுதி நேர பந்து வீச்சாளர் கூட நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திவிடுவார்கள். இந்த போட்டியில் எங்களது பேட்டிங் இந்த முறையில்தான் இருந்தது.

    நாங்கள் 20 விக்கெட்டுக்களை வீழ்த்த விரும்பினோம். அதை எங்களால் செய்ய முடிந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை செய்ய முடியவில்லை. அவர்களை விரைவாக வீழ்த்த முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

    கடந்த காலங்களில் நாங்கள் விளையாடி டர்ன் பிட்சை விட இதில் பெரிய வித்தியாசம் இருந்ததாக தெரியவில்லை. நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. அவ்வளவுதான்.

    இவ்வாறு விராட் கோலி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
    Next Story
    ×