search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் பல்வேறு சாதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புனே டெஸ்ட்
    X

    இந்திய அணியின் பல்வேறு சாதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புனே டெஸ்ட்

    புனே டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் பல்வேறு சாதனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது, பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது.

    இந்த தோல்வி இந்திய அணி பல்வேறு சாதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    1. இந்திய அணி கடந்த 2014-ல் இருந்து தொடர்ந்து 19 டெஸ்டில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போட்டுக் கொண்டிருந்தது. அந்த சாதனை இன்றுடன் முடிவுக்கு வந்தது.

    2. 2004-க்குப் பிறகு ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்ற கிடையாது. தற்போது சுமார் 13 வருடத்திற்குப் பிறகு இந்திய அணியை தோற்கடித்துள்ளது.

    3. ஆசிய கண்டத்தில் தொடர்ந்து 9 தோல்விகளை சந்தித்து வந்த ஆஸ்திரேலியா, தற்போது வெற்றி பெற்றுள்ளது.

    4. 2012-க்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் பெறும் முதல் தோல்வி இதுவாகும்.

    5. இந்த தோல்வி இந்திய மண்ணில் மிகப்பெரிய 2-வது தோல்வி இதுவாகும்.
    Next Story
    ×