search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ் வென்றது போனஸ் பாயிண்ட்: ஆஸி. கேப்டன் ஸ்மித் சொல்கிறார்
    X

    டாஸ் வென்றது போனஸ் பாயிண்ட்: ஆஸி. கேப்டன் ஸ்மித் சொல்கிறார்

    4502 நாட்களுக்குப் பின் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றது போனஸ் பாயிண்ட் என்று ஆஸி. கேப்டன் கூறியுள்ளார்.
    புனேவில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்சிலும் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் (இரண்டு இன்னிங்சிலும் தலா 6 விக்கெட்டுக்கள்) சாய்த்தார். முதல் இன்னிங்சில் ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க் அரைசதம் அடித்தார்கள். 2-வது இன்னிங்சில் ஸ்மித் சதம் அடித்தார்.

    இந்த வெற்றி குறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘கடுமையான பயிற்சியின் மூலம் இந்த வெற்றி கிடைத்ததாக நினைக்கிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடி விதத்தைப் பார்த்து நான் பெருமையடைகிறேன். டாஸ் ஜெயித்தது போனஸ் பாயிண்ட். நாங்கள் சிறந்த திட்டத்துடன் களம் இறங்கினோம். ஓ'கீபே மிகவும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

    சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் சில வீரர்களையும், சிறந்த சுழற்பந்து வீச்சாளரையும் பெற்றுள்ளோம். இந்நாள் வரை இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று சரியாக 4502 நாட்கள் ஆகிறது. இந்த ஆடுகளத்தில் மிகவும் அதிகமான ரன்கள் முன்னிலைப் பெற்றோம்.

    சரியான லெந்த் பகுதியை ஓ'கீபே பெற்றபோது, ஒவ்வொரு பந்திற்கும் விக்கெட் வீழ்த்த முடியும் என்ற உணர்வு ஏற்பட்டது. இதுபோன்ற ஆடுகளத்தில் சற்று அதிர்ஷ்டங்களும் தேவை’’ என்றார்.
    Next Story
    ×