search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான பேட்டிங்: விராட் கோலி
    X

    கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான பேட்டிங்: விராட் கோலி

    கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான பேட்டிங் என்று புனே டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து விராட் கோலி கூறியுள்ளார்.
    புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் 105 ரன்கள் மட்டுமே சேர்த்த இந்தியா, 2-வது இன்னிங்சில் 107 ரன்களில் சுருண்டது.

    முதல் இன்னிங்சில் லோகேஷ் ராகுல் மட்டுமே அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 8 பேர் ஒற்றையிலக்க ரன்னில் அவுட்டாக, 2-வது இன்னிங்சில் 7 பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி எங்களை வெளியேற்றியுள்ளது. ஆஸ்திரேலியா எங்களை தோல்வியடையச் செய்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மோசமாக பேட்டிங் செய்தது இந்த டெஸ்டில்தான். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நாங்கள் பார்க்க வேண்டியது அவசியம்.

    எங்களை விட ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடினார்கள். இந்த போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரை எங்களை நெருக்கடிக்குள்ளே வைத்திருந்தார். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். நாங்கள் இரண்டு செசனில் மிகவும் மோசமாக விளையாடிவிட்டோம். நல்ல அணிக்கெதிராக இப்படி மோசமாக விளையாடி அதன்பின் திரும்புவது மிகவும் கடினம். எந்த சாக்குபோக்கும் செல்லக்கூடாது. சில நேரம் எதிரணியின் சிறந்த ஆட்டத்தை நாம் வாழ்த்த வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×