search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனே டெஸ்ட் போட்டி: கேப்டன் சுமித் சதம்
    X

    புனே டெஸ்ட் போட்டி: கேப்டன் சுமித் சதம்

    புனேவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    புனே:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 260 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பின்னர் விளையாடிய இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் 105 ரன்னில் சுருண்டது.

    ராகுல் அதிகபட்சமாக 64 ரன் எடுத்தார். ஒகீபே 35 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணியின் கடைசி 7 விக்கெட்டுகள் 11 ரன்னில் சுருண்டது. இது மிகமோசமான நிகழ்வாகும்.

    155 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் சுமித் 59 ரன்னும், மிச்சேல் மார்ஷ் 21 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று (சனிக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது.

    298 ரன் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடியது.

    அந்த அணியின் 5-வது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். மிச்சேல் மார்ஷ் 31 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 164 ஆக இருந்தது. அடுத்து மேத்யூ வாடே களம் வந்தார்.

    மறுமுனையில் இருந்த கேப்டன் சுமித் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 64.1-வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்னை தொட்டது.

    இந்த ஜோடியை உமேஷ்யாதவ் பிரித்தார். வாடே 20 ரன்னில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 204 ஆக இருந்தது. 7-வது விக்கெட்டுக்கு சுமித்துடன் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார்.

    சுமித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 187 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 51-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 18-வது சதமாகும்.

    ஆஸ்திரேலியா 400 ரன்னுக்கு மேல் முன்னிலை பெற்று மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது.

    Next Story
    ×