search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியாளர் ஸ்ரீராமுக்கு ஒகீபே பாராட்டு
    X

    பயிற்சியாளர் ஸ்ரீராமுக்கு ஒகீபே பாராட்டு

    தனது சிறப்பான பந்து வீச்சுக்கு தமிழக முன்னாள் வீரரும், ஆஸ்திரேலிய ஏ1 அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான ஸ்ரீராம்தான் காரணம் என்று ஒகீபே கூறியுள்ளார்.

    புனே, பிப். 25-

    புனே டெஸ்ட் போட்டி யில் இந்திய அணி நிலை குலைய காரணமாக இருந் தவர் ஸ்டீவ் ஒகீபே.

    அவரது அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி 105 ரன்னில் சுருண்டது.

    32 வயதான ஒகீபே 13.1 ஓவர் வீசி 35 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். 8-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவரது சிறந்த பந்துவீச்சு இது ஆகும்.

    இந்திய அணி கடைசி 7 விக்கெட்டுகளை 11 ரன்னில் இழந்தது. இந்த மோசமான நிலைக்கு ஒகீபேயின் அபார மான பந்துவீச்சே காரணம்.

    இந்திய மண்ணில் சிறப் பாக பந்துவீசிய 3-வது இடது கை சுழற்பந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீரர் ஹெட்வே வெரைட்டி 1934-ம் ஆண்டு சென்னையில் 49 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியதே சிறந்ததாகும்.

    ஒகீபே தனது முதல் 5 விக்கெட்டை 19 பந்தில் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்தில் இந்த விக்கெட்டை எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை டோ‌ஷக், இம்ரான்கானுடன் இணைந்து பெற்றார். பிராட் 16 பந்தில் 5 விக்கெட் கைப்பற்றியதே சிறந்ததாகும்.

    தனது சிறப்பான பந்து வீச்சுக்கு தமிழக முன்னாள் வீரரும், ஆஸ்திரேலிய ஏ1 அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான ஸ்ரீராம்தான் காரணம் என்று ஒகீபே கூறி யுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி சென்னையில் விளையாடிய போது ஸ்ரீராம் எங்களுடன் இணைந்து இருந்தார். சுழற்பந்து பயிற்சியாளரான அவர் பயிற்சியின்போது எனக்கு பல்வேறு ஆலோ சனை வழங்கினார். இது மிகப்பெரிய பலனை அளித் தது. இந்திய ஆடுகளங் களில் எப்படி பந்துவீச வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதனால் என் னால் சிறப்பாக பந்து வீச முடிந்தது.

    இவ்வாறு ஒகீபே கூறி யுள்ளார்.

    Next Story
    ×