search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலுவலகத்தின் சற்று மோசமான ஒரு நாள்தான் இது: கும்ப்ளே சொல்கிறார்
    X

    அலுவலகத்தின் சற்று மோசமான ஒரு நாள்தான் இது: கும்ப்ளே சொல்கிறார்

    புனே டெஸ்டில் இந்திய முதல் இன்னிங்சில் 105 ரன்னில் சுருண்டது, அலுவலகத்தில் சற்று மோசமான ஒரு நாள்தான் இது என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
    புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 105 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, அலுவலகத்தில் நடக்கும் சற்று மோசமான ஒருநாள் போன்றுதான் இது எனக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘நீங்கள் சொல்வதுபோல், ஒருநாள் மோசமாக வரலாம் என்பது போன்றுதான் இது. இது மிகுவும் ஏமாற்றம் அளிக்கிறது. லோகேஷ் ராகுல் மற்றும் ரகானே களத்தில் இருக்கும்போது நல்ல நிலையில்தான் இருந்தோம். ராகுல் அவுட்டானவுடன் நான்கு விக்கெட்டுக்களை ஐந்து அல்லது ஆறு பந்தில் இழந்து விட்டோம். இது எங்களை பின்னோக்கு தள்ளிவிட்டது. ஒன்றிரண்டு விக்கெட்டுக்கள் தேவையில்லாமல் இழந்து விட்டோம்’’ என்றார்.
    Next Story
    ×