search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா அணியில் 13 மாதத்திற்குப் பிறகு இடம்பிடித்தார் மோர்னே மோர்கல்
    X

    தென்ஆப்பிரிக்கா அணியில் 13 மாதத்திற்குப் பிறகு இடம்பிடித்தார் மோர்னே மோர்கல்

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் 13 மாதங்களுக்குப் பின் மோர்னே மோர்கல் இடம்பிடித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல். இவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச போட்டியில் விளையாடினார். அதன்பின் முதுகு வலி காரணமாக தென்ஆப்பிரக்கா அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார்.

    அதன்பின் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா தொடரின்போது தயாரானார். அப்போது பயிற்சி ஆட்டத்திற்குப் பிறகு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த தொடரில் விளையாடவில்லை.



    தற்போது அவரது நன்றாக குணமடைந்து தனது உடற்தகுதியை நிரூபித்து காட்டியதால் நியூசிலாந்து தொடருக்கான தேன்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. டெம்பா பவுமா, 4. ஸ்டீபன் குக், 5. டி ப்ருயின், 6. டி காக் (விக்கெட் கீப்பர்). 7. டுமினி, 8. டீன் எல்கர், 9. ஹெய்ன்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), 10. கேஷவ் மகராஜ், 11. மோர்னே மோர்கல், 12. கிறிஸ் மோரிஸ், 13. ஆலிவியர், 14. பர்னெல், 15. பிளாண்டர், 16. ரபாடா.
    Next Story
    ×