search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனே டெஸ்டில் இந்தியா 105 ரன்னி்ல் ஆல்அவுட் ஆக முக்கிய காரணம்: ஒரு அலசல்
    X

    புனே டெஸ்டில் இந்தியா 105 ரன்னி்ல் ஆல்அவுட் ஆக முக்கிய காரணம்: ஒரு அலசல்

    புனே டெஸ்டில் இந்தியா 105 ரன்னில் ஆல்அவுட் ஆக விராட் கோலி மற்றும் ராகுல் அவுட் போன்ற முக்கிய காரணமாக சிலவற்றை கூறலாம். அதை தற்போது பார்ப்போம்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்து ஆல்அவட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா யாரும் எதிர்பார்க்காத வகையில் 105 ரன்னில் சுருண்டது. கடைசி 1 ரன்களில் 7 விக்கெட்டுக்களை இழந்தது.

    இந்தியா 105 ரன்னில் ஆல்அவுட் ஆகியதற்கு சில சம்பவங்களை கூறலாம். இதை கீழே பார்ப்போம்:-

    1. இந்திய அணி 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா முதல் வி்கெட்டை இழந்தது. 44 ரன்னில் 2-வது விக்கெட்டை இழந்தது. அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். அவர் தான் சந்தித்த 2-வது பந்தில் அவுட் ஆனார். ஸ்டார்க் ஆஃப் ஸ்டம்பிற்கு மிகவும் வெளியே (வைடு) வீசிய பந்தை தேவையில்லாமல் தொட்டு முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதுதான் இந்தியாவிற்கு முதல் சறுக்கல். விராட் கோலி சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார். இதனால் விராட் கோலியின் அவுட் மிகப்பெரிய தவறாக அமைந்து விட்டது.

    2. அடுத்து தொடக்க வீரர் லோகேஷ் ராகுலின் அவுட். முதல் மூன்று விக்கெட்டுக்கள் சரிந்தாலும், ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33-வது ஓவரின் 2-வது பந்தை தேவையில்லாம் தூக்கிய அடித்தார். பந்து சுழற்பந்துக்கு சிறந்த வகையில் ஒத்துழைத்தது. அந்த வேளையில் நிலைத்து நின்று ஒன்றிரண்டு ரன்களாகத்தான் ராகுல் திரட்டியிருக்க வேண்டும்.

    இந்தியா ஸ்கோர் 150 ரன்னைத் தொடும் வரை களத்தில் இருந்திருந்தால் போட்டியின் சூழ்நிலை மாறியிருக்கும். அவர் தேவையில்லாம் தூக்கி அடித்து அவுட்டாகிவிட்டார். அதே ஓவரில் இந்தியா ரகானே, சகா ஆகிய இரண்டு வி்க்கெட்டுக்களை இழந்தது. இதனால் இந்தியா படுபாதாளத்திற்குள் சரிந்தது.



    3. அஸ்வின் சிறப்பாக விளையாடக்கூடியர். அவர் லயன் பந்தை தடுத்தாடும்போது பந்து பேட்டியில் பட்டு, கால் ஷூவில் பட்டு கேட்ச் ஆனது. துரதிருஷ்டவசமாக அஸ்வின் அவுட்டாக நேர்ந்தது.

    4. ஜடேஜாவும் தூக்கியடித்தார். இதனால்தான் இந்தியா 105 ரன்னில் சுருள வேண்டிய நிலை ஏற்பட்டது. 150 ரன்னைத் தாண்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டிருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும்.

    105 ரன்னில் சுருண்டதால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 155 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இது அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய வங்கு விக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
    Next Story
    ×